கொழும்பு போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்னொரு திட்டம்!

கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ‘பார்க் அண்ட் டிரைவ்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு தயாராகி வருவதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்தார்.

இந்த திட்டம் செயல்படுத்தப்படும்போது பயணிகள் தங்களது தனியார் வாகனங்களை ரயில்வே / பேருந்து நிலையங்களுக்கு அருகே நிறுத்தி, ரயில்கள் / பேருந்துகளில் கொழும்பு செல்லலாம்.

“அவர்கள் அதே ரயிலிலோ அல்லது பேருந்திலோ திரும்பி வந்து தங்கள் தனியார் வாகனங்களில் வீடு திரும்பலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த திட்டத்தை ஆரம்பத்தில் செயல்படுத்த வேண்டிய பகுதிகளாக மகாரகம மற்றும் மகாகும்புரா அடையாளம் காணப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here