சிறைக்கைதியின் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரியை கொல்ல முயன்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்!

குருவிட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் தம்மிக்க தசநாயக்கவை சிறைச்சாலை கைதி ஒருவர் மூலமாக கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக குருவிட்ட பொலிஸார் இரத்தினபுரி பிரதான நீதிவானுக்கு அறிவித்துள்ளனர்.

குருவிட்ட சிறைச்சாலை அத்தியட்சகரை கொலை செய்வதற்கு, தற்போது கொழும்பு விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹெராயின் வியாபாரி மற்றும் பாதாள உலக உறுப்பினர் திலங்க ரோஹித ராமநாயக்க அல்லது ராமநாயக்க சுத்தாவின் கீழ் இயங்கும் இருவர் மூலம் குறித்த சிறைச்சாலை சார்ஜென்ட் திட்டமிட்டுள்ளார்.

ஹெரோயின் கடத்தல் காரர்கள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த சார்ஜென்ட் குருவிட்ட சிறைச்சாலையில் இருந்து பல்லேகெலே சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சார்ஜென்ட் குருவிட்ட சிறைச்சாலையில் சேவையில் இருந்த போது சிறைச்சாலையினுள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மோசடி செயல்களை தடுத்த காரணத்தால் சிறைச்சாலை அத்தியட்சகர் மீது கோபமுற்று இந்த கொலை சூழ்ச்சியை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்

பொலிசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பி அறிக்கையின்படி, பாதாள உலகத் தலைவரான ‘ராமநாயக்க சுத்தா’வின் இரண்டு ஆதரவாளர்களான சம்பத் மற்றும் தினேஷ் ஆகியோரைப் பயன்படுத்தி இந்த படுகொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாயக்க சுதாவிடமிருந்து ஒரு அறிக்கையையும் பொலிசார் பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here