மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது!

கண்டி புவேலிகட பகுதியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளிற்குள்ளிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.

இன்று காலை நடந்த சம்பவத்தில், கட்டிடம் இடிந்த விழுந்ததில் அருகிலிருந்த வீடும் பாதிக்கப்பட்டது. அங்கு ஐவர் இருந்த நிலையில், கட்டிட இடிபாடுகளிற்குள் மூவர் சிக்கியுள்ளனர்.

அவர்களில் ஒன்றரை மாத குழந்தை மீட்கப்பட்டது. குழந்தை உடனடியாக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

எனினும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here