நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ் தலைவர்கள் கூட்டாக கையெழுத்திட்ட கடிதம்!

தியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்தும் அடிப்படை உரிமையை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் தயாரிக்கப்பட்டது.

நீண்டநேரமாக கடிதம் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், சற்று முன்னர் கட்சிகளின் பிரதிநிதிகள் கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், சி.சிறிதரன், புளொட் சார்பில் கலந்து கொண்ட பா.கஜதீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சி சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சிறிகாந்தா, ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் சார்பில் அனந்தி சசிதரன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் சி.சிற்பரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here