கிளிநொச்சி மரப்பால ஆற்றுக்குள் வகைதொகையின்றி பெருகியுள்ள முதலைகள்!

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மரப்பாலம் ஆற்றுக்குள் வகைதொகையின்றி ஏராளம் முதலைகள் காணப்படுகின்றன.

குறித்த ஆறு அக்கராயன்குளத்திலிருந்து வான் பாயும் நீர் வெளியேறுகின்ற
ஆறாகும். இது பூநகரி குடமுருட்டி பகுதியை கடந்து கடலுக்குச் செல்கிறது.
இந்த பகுதியில் அதிகளவான கால்நடைகள் குறித்த ஆற்றை அண்டிய பகுதிகளில்
மேய்ச்சலில் ஈடுப்படுவதோடு, தங்களது நீர்த்தேவையினையும் பூர்த்தி செய்து
கொள்கின்றன.

எனவே இந்த ஆற்றுப் பகுதியிலேயே அதிகளவான முதலைகள் காணப்படுகின்றன. பகல் வேளைகளில் பெருமளவுக்கு ஆற்றோரமாக ஓய்வெடுப்பதனையும் அவதானிக்க
முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here