பிரபாகரனிற்கு ஆமைக்கறியென்றால் அலாதிப் பிரியம்: முன்னாள் மெய்ப்பாதுகாவலர் தகவல்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிற்கு ஆமை இறைச்சியென்றால் அலாதி பிரியம். வாரத்தில் ஒரு முறையவது ஆமை இறைச்சி உண்பார் என தெரிவித்துள்ளார் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான ரகு.

பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்த ரகுவின் நேர்காணலை லங்காதீப சிங்கள இதழ் வெளியிட்டது.

அந்த நேர்காணலிலேயே ரகு இதனை தெரிவித்துள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நேர்காணலில்-

தினமும் காலையில் அரைமணி நேரமும், மாலையில் அரை மணி நேரமும் உடற்பயிற்சி செய்வது பிரபாகரனின் வழக்கம். அதன்பின்னர் ஒரு பெரிய கிண்ணத்தில் மரக்கறி சூப் அருந்துவார். மதியம் மீன் அல்லது இறைச்சியுடன் இடியப்பம் உண்பார். சிலவேளை பரோட்டா ஒன்றுடன் மதிய உணவை முடித்துக் கொள்வார் மீன் அல்லது இறைச்சியுடன் இடியப்பம்தான் இரவு உணவு.

வாரத்தில் மூன்று அல்லது நான்கு தடவைகளே அவர் சோறு உண்பார். கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பின்னர் அவர் காலையிலும் மாலையிலும் தலா 5 கிலோ மீற்றர் நடைப்பயிற்சி செய்வதை நிறுத்தி விட்டு, உடற்பயிற்சி செய்தார்.

அமைப்பின் உயர்மட்ட தலைவர்களுடனான சந்திப்பின் போது நூடில்ஸ், புரியாணி, கோழி இறைச்சி, பிரைட் ரைஸ் என்பவற்றை உண்பார். உடும்பு, ஆமை இறைச்சி தலைவருக்கு பிரியமானவை. வாரத்தில் ஒரு தடவையோ, இரு வாரங்களிற்கு ஒரு முறையோ கட்டாயமாக ஆமை இறைச்சி உண்பார்.

போராளிகள் மிருகங்களை வேட்டையாடி விட்டு அதை இறைச்சியாக்கி கொண்டு வந்தால் அது தலைவரின் உணவிற்கு ஏற்கப்படாது. விலங்கை முழுமையாக கொண்டு வந்தாலே அது உணவிற்கு ஏற்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here