அஞ்சலி உரிமையை வலியுறுத்தியும், இராணுவ ஆட்சி பாணி அணுகுமுறைக்கு எதிராகவும் வடக்கு, கிழக்கில் கதவடைப்பு!

தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கும் அரசு தடைவிதித்து இராணுவப்பாணி அணுகுமுறையை கடைப்பிடித்து வரும் நிலையில், தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தி மாபெரும் ஜனநாயக போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.

தமிழ் தேசிய பரப்பில் இயங்குவதாக தம்மை குறிப்பிடும் கட்சிகள் இன்று மாலை நேரில் சந்தித்து கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளன.

இந்த கலந்துரையாடலில் வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியிலான கடையடைப்பு போராட்டத்திற்கு திட்டமிடப்படுமென அறிய முடிகிறது.

தமிழ்பக்கம் பெற்ற தகவல்களின் பிரகாரம், 25 அல்லது 26ஆம் திகதி போராட்டம் அறிவிக்கப்படலாமென தெரிகிறது.

வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் பெரும் உணர்வெழுச்சியுடன் தமிழ் மக்கள் திரண்டு, கோட்டா அரசிற்கு உறைக்கும் விதமாக தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் விதமான போராட்டமாக இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here