நடுக்கடலில் பருத்தித்துறை மீனவர்களின் படகை தாக்கி மூழ்கடித்த இந்தியர்கள்: மயிரிழையில் உயிர்தப்பினர்!

பருத்தித்துறை கடலில் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப்படகொன்று பருத்தித்துறை மீனவர் ஒருவருடைய படகை வேண்டுமென்றே இடித்து மூழ்கடித்துள்ளது.

படகில் சென்ற 3 மீனவர்களும் கடலில் குதித்து கரையை நோக்கி நீச்சலடித்த போது, சக மீனவர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் 18 இலட்சம் ரூபா தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, உயிர்தப்பிய மீனவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here