தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமையை துறந்தார் விக்னேஸ்வரன்: அரசியல் கலப்பற்ற அமைப்பாக கட்டியெழுப்ப திட்டம்!

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து க.வி.விக்னேஸ்வரன் விலகியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையை ஒரு வெகுஜன அமைப்பாகவும்- பரந்தபட்ட அமைப்பாகவும் உருவாக்கும் நோக்கத்துடன் மாற்றும் நோக்கத்துடன், தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், பேரவையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையை மீள வலுப்படுத்தவும், மீளவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை உள்ளெடுக்கவும் இந்த முடிவை விக்னேஸ்வரன் எடுத்துள்ளார்.

விக்னேஸ்வரன் மட்டுமல்லாமல், கடந்த தேர்தலில் ஏதாவதொரு கட்சியுடன் தம்மை அடையாளப்படுத்திய பேரவையின் ஏனைய உறுப்பினர்களும் பதவிவிலகவுள்ளனர். இன்னொரு இணைத்தலைவரான வசந்தராசாவும் பதவிவிலகவுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here