ராம்சி ராசீக் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராம்சி ராசீக் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராசீக், சிறுநீரகப் பாதிப்பு, மூட்டு அழற்சி, ஈரல் சிக்கல்கள், காலில் காயங்கள் என பல வித நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இப்படியிருந்தும், இவருக்கு பிணை வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்தது.

இன்றைய வழக்கு விசாரணையில் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here