தேங்காய் விலையை கட்டுப்படுத்துவது பற்றி அமைச்சரவையில் ஆராய்வு!

நாட்டில் தேங்காயின் விலை அதிகரித்து செல்வதையடுத்து, அதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தேங்காயின் விலையை 75 ரூபாவாக நிர்ணயித்து அரசாங்கத்திடம் யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தேங்காய் விலை மற்றும் தேங்காய் எண்ணெய் விலையை கட்டுப்படுத்துவது பற்றி கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது.

எனினும், விலை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேங்காய் எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் அளவை அதிகரிக்க ஒரு திட்டத்தை வகுப்பது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here