சாரதி அனுமதிப்பத்திரத்தை இனி இராணுவமே அச்சிடும்!

வாகன அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணிகளை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

தலைமை சமிஞ்ஞை அதிகாரி, தகவல் தொழிநுட்ப பணிப்பாளர் மற்றும் ஏனைய தொழிநுட்ப அதிகாரிகளுடன் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடல் மற்றும் விநியோகித்தல் தொடர்பில் செவ்வாய்கிழமை விஷேட கலந்துரையாடலொன்றை முன்னெடுத்துள்ளார்.

தற்போது சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் தனியார் நிறுவனத்திடமிருந்து இராணுவத்தினரிடம் அதனை பொறுப்பளிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை முதலாம் திகதி அமைச்சரவையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்துக்கமைய 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேஜர் ஜெனரல் அதீப திலகரத்ன, பிரிகேடியர் அஷோக பீரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here