தற்கொலைக்கு முயன்ற இளைஞன் காப்பாற்றப்பட்டார்!

நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற 23 வயது இளைஞரை ஹட்டன் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மகாவலி கங்கையின் கிளை நதியான ஹட்டன் ஓயாவில் அபோஸ்லி தோட்டத்திற்கு குறுக்கே ஓடும் நீர்வீழ்ச்சியொன்றில் குதித்தே இவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது, ஹட்டன் காவல்துறையினருக்கு நபரொருவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த இளைஞரை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

23 வயதுடைய மேற்படி இளைஞன் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தனது பெற்றோர் மீது கோபம் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறி அந்த இளைஞன் வீட்டை விட்டு வெளியேறியதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இளைஞனை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here