நீதிமன்றத்திற்கு வெளியில் கைகுலுக்கிய விக்னேஸ்வரன்-டெனிஸ்வரன்: நீதிமன்றத்தில் நடந்ததை விளக்குகிறார் (AUDIO)

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக சட்ட மோதலில் ஈடுபட்டு வந்த பா.டெனிஸ்வரன்- க.வி.விக்னேஸ்வரன் தரப்பு இன்று சமரசமாக வழக்கை முடித்துக் கொண்டனர்.

நேற்று தொடக்கம் 3 நாட்களிற்கு வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு, தீர்ப்பளிக்கப்படுமென கூறப்பட்டிருந்த நிலையில், நேற்றைய முதல்நாளில் இரு தரப்பும் இணக்கத்தை எட்டவில்லை.

நேற்று வழக்கு விசாரணை ஆரம்பித்தபோது, டெனிஸ்வரன் தரப்பு சட்டத்தரணி 4 நிபந்தனைகளை முன்வைத்தார். எனினும், அதில் முதலிரண்டையும் ஏற்க முடியாதென விக்னேஸ்வரன் தரப்பு சட்டத்தரணி தெரிவித்ததையடுத்து, நேற்று முதல்நாள் வழக்கு விசாரணை நடந்தது.

இந்த நிலையில், இன்றைய இரண்டாம் நாள் வழக்கு விசாரணையின் போது இரண்டு தரப்பும் இணக்கத்தின் அடிப்படையில் வழக்கை முடித்துக் கொண்டனர்.

இன்றைய வழக்கு விசாரணை தொடர்பில் வடமாகாணசபை முன்னாள் அமைச்சர் (முறைப்பாட்டாளர்) பா.டெனிஸ்வரன் தமிழ்பக்கத்திற்கு விளக்கினார்.

இன்று வழக்கு விசாரணை முடிந்த பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியில் க.வி.விக்னேஸ்வரனும், பா.டெனீஸ்வரனும் கைகுலுக்கிக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here