வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பிய விவகாரத்தில் எயார்லைன்ஸ் ஊழியர்கள் கைது!

இலங்கையர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவது மற்றும் இலங்கையூடாக நடக்கும் ஆட்கடத்தல் விவகாரத்தில் சிறிலங்கன் எயார்லைன்ஸ்  ஊழியர்கள் சிலர் தொடர்புபட்டிருந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஜூலை 27ஆம் திகதி போலி பாஸ்போர்டுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த மோசடி அம்பவமாகியது.

இதையடுத்து எயார்லைன்ஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

மோசடி நடவடிக்கைகளுக்கு உதவுதல் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை ஏற்பாடு செய்ததாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here