பெண்கள் இனி இந்த கடமையில் இல்லை: நாளை தொடக்கம் 2,000 ரூபா அபராதம்!

புதிய வீதி ஒழுங்கின்படி பேருந்து முன்னுரிமை பாதையில் பயணிக்கும்படி முச்சக்கர வண்டி, மோட்டார்சைக்கிள் ஓட்டுனர்களிற்கு பொலிசார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

இந்த வீதி ஒழுங்கை மீறுபவர்களிற்கு நாளை (17) தொடக்கம் 2,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்து முன்னுரிமை பாதை திட்ட அறிவுறுத்தல்களை வீதிகளில் காட்சிப்படுத்தியபடி நிற்கும் பெண் பொலிசார் அந்த பணியில் இனி ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.

பொதுமக்களிற்கு புதிய வீதி ஒழுங்கு பரிச்சயமாவதற்காக இந்த ஏற்பாட்டை பொலிசார் மேற்கொண்டனர்.

எனினும், பெண் பொலிசாரை மட்டும் அந்த பணியில் ஈடுபடுத்தியமை சமூக ஊடகங்களில் சர்ச்சையாகியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here