சிவப்பழகு விளம்பரத்தால் ஏமாந்த யுவதி: போலி வைத்தியரால் சரும பாதிப்பு!

கம்பஹா மாவட்டத்தில் யுவதியொருவரின் சருமத்தின் நிறத்தை மாற்ற செலுத்த ஊசியினால் ஏற்பட்ட பக்கவிளைவுகளையடுத்து, போலி பெண் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சியம்பலாபே, திக்வெல பிரதேசத்தல் வைத்து 32 வயதான பெண் வைத்தியர் ஒருவரே கைதானார்.

வேறொரு வைத்தியரின் பதிவு இலக்கத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ முத்திரையுடன் மருந்த விநியோகித்து வந்த இப்பெண் காய்ச்சல், சளி போன்ற நோய்களுக்காகவும் சிகிச்சையளித்து வந்துள்ளார்.

சருமத்தின் நிறத்தை மாற்றும் சிகிச்சை தொடர்பில் இணைய விளம்பரமொன்றையும் இவர் வெளியிட்டிருந்தார்.

இந்த விளம்பரத்தை பார்த்து, திக்வெல பகுதியிலள்ள போலி வைத்தியரை தேடி, யுத்தளத்தை சேர்ந்த யுவதியொருவர் சென்றுள்ளார். சிவப்பழகை பெறலாமென ஊசியொன்றை போலி வைத்தியர் ஏற்றியுள்ளார்.

இது யுவதிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, சருமத்தில் கொப்புளங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அந்த பெண் வைத்தியரில் சந்தேகமடைந்த யுவதி, அவர் தொடர்பில் ஆராய்ந்ததில், அவர் போலி வைத்தியர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மிகஹவத்த பொலிசாரிடம் முறையிட்டார்.

இதையடுத்து அவரது மருத்துவ நிலையத்தை பொலிசார் சுற்றிவளைத்து சோதனையிட்டதில், போலி முத்திரை மற்றும் ஆவணங்களுடன் பெண் கைது செய்யப்பட்டார்.

தனது காதலனுடன் இணைந்து சுமார் ஒரு வருடமாக இந்த சட்டவிரோத வைத்திய நிலையத்தை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here