10 மாதத்திலேயே பிறந்தோம்; எனக்கு 22 வயது; தயவுசெய்து எமது படங்களுடன் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இணையத்தை கலக்கும் இளம்ஜோடி வேண்டுகோள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்கவாசிகளிடம் சிக்கியுள்ளனர் புத்திக-நெத்மி ஜோடி.

மிக இளமையான இந்த ஜோடியின் திருமண புகைப்படங்களை, புகைப்பட கலைஞர் தீக்ஷன பகிர்ந்திருந்தார். அவர்களின் திருமண புகைப்பட கலைஞர் அவர்தான்.

நேற்று (19) அவர் இந்த புகைப்படங்களை பதிவேற்றியதிலிருந்து இன்றுவரை சுமார் 6,500 பேர் பகிர்ந்திருக்கிறார்கள். அது தவிர கணக்கிலடங்காதவர்கள் அந்த புகைப்படங்களை பதிவேற்றி கருத்திட்டு வருகிறார்கள்.

ஆரம்பத்தில் சிறார்கள் இருவர் திருமணம் செய்தார்கள் என நெட்டிசன்கள் கேலியாக இந்த புகைப்படங்களை பகிர்ந்தார்கள்.

பின்னர், திடீரென நெட்டிசன்கள் ரூட் மாறி, அவர்கள் ஒரு மாதம் முன்னரே பிறந்தவர்கள், மாப்பிள்ளையின் வயது 28, மணப்பெண்ணின் வயது 27 என ஒரு கதையை அவிழ்த்து விட்டனர்.

அதை உண்மையென நம்பி, பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மணமகன் புத்திக மகேஸ் கீர்த்திரட்ண நெட்டிசன்களிடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். தான் ஒரு மாதம் முன்னர் பிறக்கவில்லை, இது போன்ற போலிக்கதைகளை பரப்பாதீர்கள். அதற்கு முன்னர் எனது மனைவியுடன் இணைத்து இப்படியான போலிக்கதைகளை பரப்பாதீர்கள். நாம் உரிய வயதில் சட்டப்படி திருமணம் செய்துள்ளோம். எனது வயது 22 என பதிவிட்டுள்ளார்.

அவரது பேஸ்புக் பதிவில்-

යාලුවනේ ඔයාල මෙ ශෙය කරන පොටො ටික අයින් කරන්න.මොකද මගෙ පොටො වලට මොනව කරත් කමක් නෑ.මගෙ වයිෆ්ගෙ පොටො වලට මුකුත් කරන්න එපා.මම ඔය කියනව වගෙ අඩු මාසෙන් ඉපදිලත් නෑ.මට සල්ලි යාන වහන තියෙනව.මට් අවුරුදු 22.මෙ පොටො ටික අවුල් විදියට හදල තියෙන්නෙ.ප්ලීස් මන් ඔයාලගෙන් ඉල්ලන්නෙ එඩිට් කරපු පොටො අයින් කරන්න.🙏🙏🙏🙏🙏🙏මෙ මගෙ පොටො එකට ඔනි දෙයක් කරන්න.එත් මාඉ මගෙ වයිෆ් ඉන්න එවයි එඩිට් කරන්න එපා😢😢😢😢ඇයි මිනිස්සු එහෙම.මම කාටවත් ඔනී දෙ කරන්න ඔනීද.ඇයි ලන්කාවෙ අය ඔහොම.මනුස්සයෙක්ව විහිලුවට ගන්න එපා.මොකද ඔව කවද හරි පඩිසන් දෙනව.හිතක් පපුවක් තියෙනව නෙද.ඇයි ඔයාලා ඔහොම මිස්සුන්ට හිනා වෙන්නෙ என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here