வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லவும் தடை!

நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லவோ, அங்கு பூசைகள் செய்யவோ முடியாது என ஆலய நிர்வாகத்திற்கு நெடுங்கேணி பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமையவே, நெடுங்கேணி பொலிசார் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.

ஆலய நிர்வாகத்தினர் நேற்று நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, தொல்பொருள் திணைக்களத்தின் கடிதம் காண்பிக்கப்பட்டது. அந்த கடிதம் தனிச் சிங்களத்தில் இருந்தது.

தொல்பொருள் இடங்கள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சிரமதானம் செய்யவோ, திருவிழா நடத்தவோ முடியாது என கடிதத்தில் உள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

வெடுக்குநாறி ஆலய விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், வெடுக்குநாறி ஆலயத்தில் வழிபட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அதனை ஆலய நிர்வாகம் சுட்டிக்காட்டியபோது, பொலிசார் அதை ஏற்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here