திலீபன் நினைவேந்தலிற்கு மன்னாரிலும் தடை!

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் அரசியல் அமைப்பு தலைவராக செயல் பட்டு மரணித்த இராசையா பார்த்தீபன் அல்லது திலீபனின் நினைவு நாளை நினைவு கூறுவதற்கு மன்னார் நீதவான் நீதி மன்றம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (15) தடை விதித்துள்ளது.

மன்னார் நீதி மன்ற அதிகார எல்லைக்குள் தியாகி திலீபனின் நினைவஞ்சலி நிகழ்வை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவல்களுக்கு அமைவாக தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகளை மீள் எழுச்சி செய்யும் நோக்கில் நித்திலம் பதிப்பகத்தின் உரிமையாளர் வி.எஸ்.சிவகரன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மன்னார் நகரசபை உப தவிசாளார் செபஸ்டியன் ஜோன்சன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடாக ஏற்பாடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்குகொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நினைவஞ்சலி நிகழ்வு நடாத்துவதால் குறித்த வீதியில் வாகன நெரிசல் ஏற்படும் என்பதுடன் இவ் நிகழ்வில் கலந்து கொள்ளும் மக்களுக்கு கிளர்ச்சி பற்றிய எண்ணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் , நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழலுக்கும் இவை பங்கம் ஏற்படுத்தும் என்பதாலும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (15) தொடக்கம் எதிர் வரும் 28 ஆம் திகதி வரையான கலப்பகுதியில் மன்னார் நீதவான் நீதிமன்ற அதிகார எல்லைக்குள் நினைவேந்தல் நிகழ்வு நடாத்துவதற்கு உடனடி தடை உத்தரவு பிரப்பிக்கப்படுள்ளது.

அத்துடன் வி.எஸ். சிவகரன் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மன்னார் நகரசபை உப தவிசாளார் செபஸ்டியன் ஜான்சன்  வன்னி பாரளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன்ஆகியோரை எதிர் வரும் 28 ஆம் திகதி காலை 09 மணியளவில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவுக்கு எதிராக வி.எஸ்.சிவகரன் மேன்முறையீடு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here