நானு ஓயா விபத்தில் இளைஞன் பலி!

அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளொன்று பஸ்ஸில் மோதுண்டு விபத்துக்குள்ளானதால் இளைஞன் ஒருவர் பலியாகினார்.

நானு ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வின்டிகோனர் பகுதியில் இன்று (15/) மதியம் 12.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

நோர்வூட் பகுதியிலிருந்து நுவரெலியா சென்ற மோட்டார் சைக்கிளொன்று முந்திச் செல்ல முற்பட்டபோது நுவரெலியாவிலிருந்து அட்டன் நோக்கி வந்த இ.போ.ச பஸ்ஸில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் நோர்வூட் பகுதியை சேர்ந்த செல்வராஜ் பிரேம் சஜித் (24)  என்ற இளைஞனே பலியாகியுள்ளார். பஸ்ஸின் சாரதி நானுஓயா பொலிஸாரினால் கைது செய்துசெய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here