கசிப்பு விற்ற இளைஞன் கைது!

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஆலம்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாகரை ஆலம்குளம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு வியாபாரத்தில் ஒருவர் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் ஆலங்குளம் பிரதேசத்தில் குறித்த 28 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த நபரிடம் இருந்து 3500 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவருடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் இருக்கின்றார்களா என்ற சந்தேகத்தில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here