நாவிதன்வெளி பகுதிகளில் பட்டதாரிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான 5 மாத கால தலைமைத்துவ பயிற்சி நேற்று (14) நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் ஆலோசனைக்கமைய நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா வழிகாட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் பயிற்சி நெறியானது அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட பட்டதாரி நியமனம் பெற்ற பட்டாதாரிகளை உள்ளடக்கியதாக பொதுத்துறை, முகாமைத்துவத்துறை, தனியார் துறை மற்றும் திட்ட வேலைகள் துறை ஆகிய துறைகளில், சகல பட்டதாரி பயிலுனர்களுக்கும் மூன்று வார கால பயிற்சிகள் 05 குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் வழங்கப்படவுள்ளதாக நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

அதற்கமைய முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட பெண் பட்டதாரி பயிலுனர்களுக்கு அம்பாறை கொண்டவட்டுவான் இராணுவ பயிற்சிப் பாடசாலையிலும், ஆண் பட்டதாரி பயிலுனர்களுக்கு மின்னேரியா இராணுவ பயிற்சிப் பாடசாலையிலும் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் மூன்றாவது தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்களிலும் நான்காவதாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்திலும் ஐந்தாவதாக தெரிவு செய்யப்பட பட்டதாரி பயிலுனர்களுக்கு நாவிதன்வெளி பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலைய மண்டபத்திலும் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இப் பயிற்சி நெறியில் அரச ஊழியர்கள் பழகிக்கொள்ளவேண்டிய பழக்கவழக்கங்கள், இலங்கை அரச ஊழியர்கள் பற்றிய விபரம், நேர முகாமைத்துவம் ,போன்ற பல விரிவுரைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன், நாவிதன்வெளி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.யோகஸ்வரன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித் ,அண்ணமலை இராணுவ முகாம் லெப்டினண்ட் ஹனீஸ்க சந்திர சிறி உட்பட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here