சாய்ந்தமருதில் 3 வாகனங்கள் மோதி விபத்து

பிரதான வீதியில் எதிர் எதிரே மோதிய இரு வாகனங்களுடன் மற்றுமொரு வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் இன்று(14) மாலை இடம்பெற்றுள்ளது.

கல்முனை பகுதியில் இருந்து காரைதீவு பகுதியை நோக்கி சென்ற வெள்ளை நிற காரும் நேர் எதிர் திசையில் வந்த தனியார் பேரூந்துடன் மோதி வீதியில் நிறுத்தப்பட்ட மற்றுமொரு காருடன் மோதியது.

இதனால் வாகனங்கள் பகுதி அளவில் சேதமடைந்ததுடன் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.இவ்விபத்தில் கார் சாரதி காயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்.மேலும் சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸார் வருகை தந்ததுடன் விபத்தினால் தடைபட்ட போக்குவரத்தினை சீர் செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றுமொறுவர் இப்போதும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here