மந்துவிலில் விமானப்படை குண்டுவீச்சில் உயிரிழந்தவர்களை உறவுகள் நினைவுகூரவும் தடை!

மந்துவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட 24 உறவுகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நாளைய தினம் (15) அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்தவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து நிகழ்வுகளை செய்வதற்கு பொலிசார் தடை விதித்துள்ளனர்

விமானப்படை விமானங்கள் 1999.09.15 அன்று நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழந்திருந்தனர்.

தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினுடைய ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது

குறித்த அமைப்பினுடைய இனைப்பாளர் ச. ரூபனை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து குறித்த நிகழ்வினை செய்ய வேண்டாம் என பொலிசார் தடை விதித்து இருக்கின்றனர்

உயிர் நீத்த உறவுகளுக்காக அகவணக்கம் செலுத்தி மலர்தூவி மலரஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ள நிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இறந்தவர்களுடைய உறவுகள் அனைவரையும் நிகழ்வில் பங்கு கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பொலிசாரின் தடைகளையும் மீறி குறித்த நிகழ்வானது அமைதியான முறையில் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினுடைய ஏற்பாட்டில் இடம்பெறும் என அமைப்பின் இணைப்பாளர் ச. ரூபன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here