யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் இந்திக!

யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள கிராமிய, வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த இன்று (14) யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தை பார்வையிட்டார்.

இதன்போது, யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்டும் இணைந்திருந்தார்.

இதன் போது கட்டுமானங்கள் நடைபெற்று முடிந்துள்ள கலாசார நிலையம் பார்வையிடப்பட்டதுடன், மேற்கொள்ள வேண்டிய இறுதி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் இவ் விஜயத்தில் யாழ் இந்தியத் துணைத் தூதுவர் திரு.எஸ். பாலச்சந்திரன், யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அமைச்சின் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், மாநகர முன்னால் முதல்வரும் தற்போதைய உறுப்பினருமாகிய யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், யாழ் மாநகரசபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here