பதுளையில் 100 பக்கெட் ஹெரோயினுடன் ஒருவர் கைது

100 பக்கெட் ஹெரோயினுடன் 30 வயதுடைய நபரொருவர் (14) அன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹாலி எல பொலிஸார் தெரிவித்தனர்.

100 பக்கெட் ஹெரோயினையும் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து – கொழும்பிலிருந்து பதுளைக்கு, பொதுபோக்குவரத்தில் எடுத்துக்கொண்டு வருகையிலேயே பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பதுளை நகருக்கு அருகாமையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை, கடுபெல்லகம பகுதியைச் சேர்ந்த இவர், 8 வீடுகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும், தலைமறைவாகி தற்போது கொழும்பு நவகமுவ பகுதியில் இருந்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டியவில் இருந்து இவரே பதுளைக்கு ஹெரோயின் கடத்துகிறார். இது தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here