மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை வல்லுறவிற்குள்ளாக்கியவருக்கு 58 ½ வருட கடூழிய சிறைத்தண்டனை!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட நபருக்கு 58 ½ வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கண்டி நீதவான் ஆர்.எஸ்.எஸ்.சப்புவிட கடந்த வெள்ளிக்கிழமை (11) இந்த தீர்ப்பையளித்தார்

உத்துதம்பரவைச் சேர்ந்த நபரொருவர், மேதா-மஹானுவர பகுதியில் 2012 டிசம்பர் 18 முதல் 2013 பெப்ரவரி 18 வரை மூன்று முறை மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், அவருக்கு 18 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்பிறகு அவர் 3 முறை மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை வல்லுறவு புரிந்ததை சுட்டிக்காட்டிய நீதிவான், சிறைத்தண்டனையை 3 மடங்காக்கி- 54 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்தார்.

ஒருமுறை வல்லுறவிற்குள்ளாக்கியதற்காக 25,000 ரூபா வீதம், 3 முறை வல்லுறவிற்குள்ளாக்கியதற்கும் 75,000 ரூபா அபராதம் விதித்தார். அதை செலுத்த தவறின் மேலும் 1/12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1 மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்தும்படியும், தவறின் மேலதிகமாக 2 ஆண்டுகள் கடூழியசிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் யுவதிக்கு பாதுகாப்பு வைப்புத் தொகையாக 15,000 ரூபா வங்கியில் வைப்பிலிடும்படியும், அதை செலுத்த தவறின் மேலும் 1 வருடம் சிறைத்தண்டனையும் விதித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here