திலீபன் நினைவேந்தல் தடைக்கு எதிராக மணிவண்ணன் மேன்முறையீடு!

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடைவிதித்து யாழ் நீதிமன்றம் இட்ட உத்தரவிற்கு எதிராக, மேன்முறையீடு செய்யவுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன்.

இன்று யாழ் நீதிமன்ற வளாகத்தில் இதனை அறிவித்தார்.

தியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்த தடைவிதித்து யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் இன்று தடையுத்தரவு பிறப்பித்தது.

எம்.கே.சிவாஜிலிங்கம், வி.மணிவண்ணன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், இ.ஆனொல்ட், வ.பார்த்தீபன், அனந்தி சசிதரன் உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவிற்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றத்தில் மணிவண்ணன் மனு தாக்கல் செய்யவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here