இணையத் திருட்டில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்புமா?

இணைய ஊடகங்கள் நடத்தும் பெரும்பாலானவர்கள் ஒரு வகையான திருடர்கள்தான். இன்னொரு இடத்தில் கொப்பி செய்து, தமது தளத்தில் பேஸ்ற் செய்துவிட்டு இருந்து விடுவார்கள்.

இப்படி நன்றாக கொப்பி பேஸ்ற் செய்ய தெரிந்தவர்களையே இன்று இணைய ஊடகங்கள் ஊடகவியலாளர்களாக கருதுகிறது. பல இணைய ஊடகங்கள் எதிர்பார்க்கும் முதலாவது தகுதி “கொம்பியூட்டர் தெரியுமா?… கொப்பி பண்ண தெரியுமா?“ என்பதுதான்.

இவ்வளவு கொடுமைக்குள்ளும், நகைச்சுவையான விடயம் என்ன தெரியுமா?- கொப்பி செய்தி வெளியிடும் எல்லா தளங்களும் ஒரு விளம்பரத்தை தவறாமல் வெளியிடுகிறார்கள். அது- செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது பக்கத்தை லைக் செய்யுங்கள் என்பது.

இது பற்றி தமிழ்பக்கம் பலமுறை குறிப்பிட்டுள்ளது. தமிழ்பக்கத்தின் செய்திகளை இணைய ஊடகங்கள் பல தொடர்ந்து திருடி வெளியிட்டு வருகின்றன. அதில் முதன்மையானது ஜேவிபி தளம். லங்காசிறி குழுமத்தினுடையது.

சில தினங்களின் முன்னர் கூட, இப்பொழுது அதிகம் திருடும் இணையங்கள் என்று சிலவற்றை குறிப்பிட்டோம். பல இணையங்கள் இருந்தாலும், எந்த செய்தியாளரையும் நம்பியிராமல், தமிழ்பக்கத்தை மட்டுமே நம்பி- சுடர் செய்தி போன்ற தளங்கள் இயங்கி வருவதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

இப்பொழுது தமிழ்பக்கத்தின் செய்திகளை பிரதி செய்து வெளியிடும் பேஸ்புக் கணக்கொன்றை, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் பேஸ்புக் கணக்கின் ஊடாக தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் கணக்கை கையாளும் தரப்பு, அல்லது அந்த கட்சி வட்டாரங்களினால் அந்த சமூக ஊடகத்தளம் இயக்கப்படலாம். ஒரு அரசியல் பிரமுகராக, இந்தவகையான கொப்பி பேஸ்ற் செய்திகளை பகிர்வது அறமற்றது. இன்னொருவரின் உழைப்பை உறிஞ்சி செயற்படும் தளங்களை அரசியல் பிரமுகர்கள் ஆதரிப்பதும், இயக்குவதும் நியாயமற்றவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here