வெற்றிடமாக உள்ள பதவிகளிற்கு இன்று புதியவர்கள்?

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைமைத்துவத்தை அடையாளம் காட்ட, கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று (14) கூட்டப்படவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகத்தில் கூட்டம் இடம்பெறும்.

தலைவர், பொருளாளர் மற்றும் துணைத் தலைவர் உட்பட வெற்றிடமாக உள்ள அனைத்து பதவிகளையும் நிரப்புவது குறித்து இன்று விவாதிக்கப்படும். கட்சியின் முக்கிய பொறுப்பிலுள்ள பலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து விட்டதால் கட்சியில் பல பதவிகள் வெற்றிடமாகி விட்டன.

வெற்றிடமான பதவிகள் அனைத்தும் எதிர்காலத்தில் ஒரு செயற்குழு கூட்டத்தில் நிரப்பப்பட வாய்ப்புள்ளது.

கட்சி அரசியலமைப்பின் படி இரண்டு மாதங்களுக்கும் மேலாக கட்சியில் எந்தவொரு பதவியும் வெற்றிடமாக இருக்க முடியாது என்பதால், வெற்றிடங்கள் குறித்து கட்சி விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

கட்சியின் பிரதித் துணைத் தலைவர் வாக்கெடுப்பின்றி நியமிக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், பிரேரிக்கப்படும் பிரதித்தலைவரை செயற்குழு அங்கீகரிப்பதில் குழப்பமிருந்தால் வாக்கெடுப்பு இடம்பெறும்.

செயற்குழுவால் நியமிக்கப்படவுள்ள துணைத் தலைவர் கட்சித் தலைவரின் வாரிசாக இருப்பார், அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் அவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

இந்த ஆண்டு மாகாண சபை தேர்தல் நடத்தப்படாவிட்டால் ஜனவரி மாதம் ரணில் தலைமை வகிப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here