மணிவண்ணனை ஆதரிக்க முடிவு செய்துள்ள கொடிகாமம் இளைஞர்கள்!

தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் கலந்துரையாடல் நேற்று (13)  யாழ்.கொடிகாமம் நட்சத்திர மஹால் விடுதியில் இடம்பெற்றது.

கலதுரையாடலின் பின்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளையோர் அமைப்புபினருக்கான கலந்துரையாடல் இன்று சாவகச்சோரி கொடிகாமம் பகுதியில் நடாத்தினோம்.

அதாவது தமிழ் மக்களின் அரசியல் பல்வேறு பட்ட கட்சிகள் ஊடாக சிதைக்கப்பட்டுள்ளது. அதோடு 2020 ஆண்டு நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியவாதம் சிதைக்கப்பட்டுள்ளது.

இது கண்ணூடாக தெரிகின்ற விடயம். சிங்களத் தேசிய சக்திகள் அல்லது அவர்களோடு சேர்ந்து பயணிக்கின்ற கட்சிகள் இந்த வடக்கு கிழக்கு மையப்படுத்தி உருவெடுக்கின்ற ஒர் ஆலமரமாக விஸ்தரிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அதனை சீர் செய்து ஒரு பலம் வாய்ந்த கட்சியாக மாற்றுவதற்கே இந்த ஒன்று கூடலை இங்கு கூட்டியிருந்தோம் என தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் அனைவரும் மணிவண்ணனோடு இணைந்து பயணிப்பதாக உறுதியளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here