அட்லெடிகோ மாட்ரிட் மேலாளர் கொரோனாவால் பாதிப்பு!

ஸ்பெயினின் பிரபல கால்பந்தாட்ட அணியான அட்லெடிகோ மாட்ரிட் மேலாளர் டியாகோ சிமியோன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். எனினும், அவரில் அறிகுறிகள் தென்பட்டிருக்கவில்லை. அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அட்லெடிகோ மாட்ரிட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முழு அணியினரிடமும் கடந்த வெள்ளிக்கிழமை பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையிலேயே டியாகோ சிமியோன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அட்லெடிகோ மாட்ரிட் அணிவரும் செவ்வாயன்று புதிதாக லீக்கில் நுழைந்த கேடிஸ் எஃப்சிக்கு எதிராக நட்புரீதியான போட்டியை விளையாட உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், அந்த அணியின் ஸ்ட்ரைக்கர் டியாகோ கோஸ்டா பிசிஆர் சோதனையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். தற்போது மேலாளரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here