மராட்டிய கவர்னம்- கங்கனா ரணாவத் சந்திப்பு!

நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை ராஜ் பவனில் சந்தித்து பேசினர்.

நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறினார். இதையடுத்து அவருக்கும், மாநிலத்தை ஆளும் சிவசேனாவுக்கும் வார்த்தை போர் வெடித்தது. இதையடுத்து பாந்திரா பாலிஹில்லில் உள்ள நடிகையின் பங்களாவில் சட்டவிரோத புதுப்பிப்பு பணிகள் நடந்ததாக கூறி மும்பை மாநகராட்சி அதை இடித்து தள்ளியது. இதனால் மோதல் மேலும் முற்றியது. நடிகை கங்கனா முதல்-மந்திரி தாக்கரேயை அவரது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்தார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகை கங்கனா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை ராஜ் பவனில் சந்தித்து பேசினர்.

கவர்னர் சந்திப்புக்கு பின் கங்கனா ரணாவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எனக்கு நடந்த அநியாத்தை பற்றி கவர்னரிடம் விளக்கி கூறினேன். எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். கவர்னர் தனது சொந்த மகளைப் போலவே எனது குறைகளை கேட்டறிந்தது எனது அதிர்ஷ்டம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here