கொரோனா தொற்று  3,219 ஆக உயர்ந்தது

நாட்டில் இன்று 24 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர் எண்ணிக்கை 3,219 ஆக உயர்ந்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 16 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து திரும்பிய 4 பேர், மாலைதீவில் இருந்து திரும்பிய 2 பேர், எதியோப்பியாவிலிருந்து திரும்பியவர் மற்றும் தாய்லாந்தில் இருந்து வந்த உக்ரேனிய நாட்டவர்  கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் 19 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,996 ஆக உயர்ந்துள்ளது.

ஒன்பது வெளிநாட்டினர் உட்பட 211 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சந்தேகத்தில் 49 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here