வேலோடும் மலையில் சித்தர்களிற்கு குடமுழுக்கு!

சிவ பூமியாம் இலங்காபுரி மட்டக்களப்பு சித்தாண்டி சித்தர்களின் ஆதி இருப்பிடமான வேலோடும் மலையில் சித்தர்கள் பிரதிஷ்டை மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழாவுக்காக சித்தர்கள் சிலைகள் தாங்கிய பவனி வேலோடு மலையை நேற்று முன்தினம் முற்பகல் சென்றடைந்தது.

சித்தர்கள் தாங்கிய பவனி பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் பக்தி பாமாலை பஜனைக் குழுக்களின் பாடல்கள் என்பனவற்றில் மத்தியில் சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பிரதேசத்தில் உள்ள ஏனைய ஆலயங்களுக்குச் சென்று சித்தாண்டி சித்திரவேலாயுதர் முருகன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூசைகள் இடம்பெற்றது சித்தர்கள் தாங்கிய பவனி வேலூர் மலையை நோக்கி புறப்பட்டது.

சித்தாண்டியில் இருந்து சந்தனம் ஆடு ஊடாக வேல் தாங்கிய பக்தர்கள் முருகனின் பக்தி பரவசம் நிறைந்த பாடல்களுடன் ஈரல் அப்புறம் கிராமத்து பிரிவுக்குட்பட்ட பேரம் கிராமத்தை சென்றடைந்தது.

அங்கு வரவேற்கப்பட்ட தோரணம் அப்பகுதி மக்களினால் பவனியை பரவிற்று நரை கூட தாம் புலன்கள் வைக்கப்பட்டு வருகை தந்த பக்தர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் இலக்குப் பொத்தானை சென்றடைந்த பவனி வேலோடிய மலையைச் சென்று அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

சித்தர்களின் ஆதி இருப்பிடம் வேரோடும் மலையில் சித்தர்கள் பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி இருக்கின்ற வேளை 12.09.2020 சனிக்கிழமை கிரியா ஆரம்பம் நடைபெற்து.

13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை எண்ணெய்க்காப்பு இடம்பெறுகிறது.

மறுநாள் திங்கட்கிழமை 14.09.2020 மகா கும்பாபிஷேகம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி ஆகி உள்ளது.

திருமூலரால் சிவபூமி எனப்போற்றப்படும் இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் பல்லாயிரம் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டதும் குமரி கண்டத்தின் எஞ்சிய பாகமான குபேர தேசம் என்று உலகத்தாரால் போற்றப்படுவதுமான இலங்கைத் திருநாட்டில் கிழக்கு மாகாணத்தில் சிகண்டி முனிவரால் பிரதிஷ்டை செய்து அங்கேயே சமாதியான சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு அண்மையில் இழுக்குப் பொத்தானை கிராமத்தில் வேலோடு மலை காணப்படுகின்றது.

ஆதியில் இந்த இடம் போகர் பெருமானால் வேல் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இடம்.

அதனைத் தொடர்ந்து நாகர் குலத்தைச் சேர்ந்த மாமன்னன் நாகராஜனால் பல்லாயிரம் வழிபாடுகள் செய்து இன்றும் பல சஞ்சீவினி மூலிகைகள் குகைகள் அமானுஷ்ய இரகசியங்களை கொண்ட மலைத்தொடர்.

இந்த இடத்தில் இந்தக் கலியுகத்தை ஆளுகின்ற அத்தனை சித்தர்களையும் பிரதிஸ்டை செய்து மங்கலம் நிறைந்த சர்வாதி வருடத்தில் சுபமுகூர்த்தம் கூடியவேளையில் கும்பாபிஷேக குடமுழுக்கு நடத்த அகத்தியர் பெருமான் அருளால் பிறப்பித்து இருக்கின்ற நிலையில் இடம்பெறுகின்றன அனைத்து வழிபாடுகளிலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here