ஸ்ரீ வில்காம பிள்ளையார் ஆலயத்தின் மண்டலாபிஷேகம் மற்றும் பால்குட பவனி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வில்காம பிள்ளையார் ஆலயத்தின் மண்டலாபிஷேகம் மற்றும் பால்குட பவனியும் சங்காபிஷேகமும் இன்று இடம்பெற்றது.

1009 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் இடம் பெற்றதுடன் கிரான் காளிகோவிலில் இருந்து ஸ்ரீ வில்காம பிள்ளையார் ஆலயத்திற்கு பக்த அடியார்கள் பால்குடம் சுமந்து வந்தார்கள்.

பால்குட பவனியும் சங்காபிஷேகமும் பிரதம சிவாச்சாரியார் சர்வதேச இந்துமத கருபீடாதிபதி சபரிமலை குரு முதல்வர் மஹாராஜா ராஜகுரு ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இடம் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here