வைத்தியசாலையுண்டு; ஆனால் வைத்தியரின் வீட்டிலேயே கிளினிக்: மலையக கிராமமொன்றின் அவலம்!

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பெரட்டாசிஇ கரகஸ்தலாவஇ (474A) எல்பொட (474J) போன்ற கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த பெரட்டாசி தோட்டம் ரஸ்புருக் பிரிவு, பெரட்டாசி பிரிவு, பூச்சிகொட பிரிவு, பெரட்டாசி தொழிற்சலை பிரிவு, மேரியல் பிரிவு, அயரி பிரிவு, எல்பொட வடக்கு, மேமொழி பிரிவு, காச்சாமலை பிரிவு, கட்டுக்கித்துல தோட்டம், வெதமுள்ள கெமினிதன் பிரிவு, கந்தலா தோட்டம் போன்ற தோட்டங்களில் சுமார் 10,000 க்கு மேற்பட்ட தோட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தோட்டங்களில் பெரும்பாலானோர் தோட்ட தொழிளாலர்கள். இவர்கள் வேலை தவிர்ந்த மற்றைய நேரங்களில் விவசாயம் செய்து வருகின்றனா். இவர்களின் வைத்திய தேவையின் பொருட்டே பெரட்டாசி தோட்ட வைத்தியசாலை அமைக்கப்பட்டது.

முன்னால் ஜனாதிபதி திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க ஆட்சிக்காலத்தில் தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் திட்டத்தின் கிழ் மலையகத்தில் காணப்பட்ட வைத்தியசாலைகளான இறம்பொடை – பெரட்டாசி தோட்ட வைத்தியசாலை, ஹேவாஹெட்ட -முல்லோயா தோட்ட வைத்தியசாலை, கந்தபொலை – ஜபொரஸ்ட் தோட்ட வைத்தியசாலை, கடுகன்சேனை – பார்கேபல் தோட்ட வைத்தியசாலை, ஹட்டன்- டிக்கோயா வைத்தியசாலை போன்றவை தோட்ட நிர்வாகத்திலிருந்து அரசாங்க வைத்தியசேவைக்கு உள்வாங்கப்பட்டது.

இதன்படி இவைகளை திருத்தும் பணிகளும் இதற்கான வளங்களை பெற்றுகொடுப்பதில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுடது. அதன் பயனாக பெரட்டாசி தோட்டத்தில் அமைக்கப்பட்ட வைத்தியசாலை திறக்கப்பட்ட போதும் தற்போதும் மருந்தகமாகவே செயற்பட்டு வருகின்றது. நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெரும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில் ஒரு வைத்தியரும் 03 ஊழியர்களும் 02 காவலாளியுமே காணப்படுகின்றனர்.

இருக்கும் வைத்தியர் காலை 8.00 மணிக்கு வந்து மாலை 4.00 மணிக்கு தனது சேவையை முடித்து விடுவார். 4.00 மணிக்கு பிரகு மருந்து எடுக்க முடியாது. வெள்ளிக்கிழமை 12 மணிக்கு வீட்டுக்கு போய் விடுவார் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கே மீண்டும் வருவார். சனி ஞாயிறு மற்றும் போயா தினங்களில் பூட்டு தான். இந் நிலையில் மேலும் ஒரு வைத்தியர் இந்த வைத்தியசாலைக்கு தேவைப்படுகின்றது. இதனை பெற்றுக் கொடுக்க சம்பந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர்களோ மாலையில் வேலைகளை முடித்துவிட்டு தான் வைத்தியசாலைக்கு வருவார்கள். அப்போது வைத்தியர் இருக்கமாட்டார். இனி வைத்தியரின் வீட்டுக்கு சென்று பணம் கொடுத்தே மருந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஒரு வைத்தியரும் வேறு வேலைகளுக்கும் கூட்டங்களுக்கும் சென்றால் அன்று வைத்தியசாலை மூடப்பட்டிருக்கும்.

பல லட்சம் ரூபா செலவு செய்து கட்டப்பட்ட தங்கியிருந்து சிகிச்சை பெறக் கூடிய இந்த வைத்தியசாலை தற்போது மக்களுக்கு முறையான பயன் இன்றி காணப்படுகின்றது. நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாது. கட்டில் போன்றவையும் இல்லை. இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டது நோயாளர்கள் தங்கி வைத்தியம் பெருவதற்கே ஆனால் தற்போது அவை நடைமுறையில் இல்லை. மக்களின் மேலதிக அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக புஸ்ஸல்லாவ வைத்தியசாலையையே நாட வேண்டியுள்ளது.

அதுவும் சிக்கலான காரியம் காரணம் 25 கி.மீ பாதை முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த பாதையில் தற்போது குறிப்பிட்ட தூரம் செப்பனிடப்பட்டு மிகுதியானது திருத்தப்பட்டு வருகின்றது. இப்பாதையில் பஸ் விபத்துக்கள் சுமார் 5 முறை இடம் பெற்றுறுள்ளது. பலர் இறந்தும் பலர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். நோயாளர்களையும்இ குழந்தை பெறுவோரர்களையும் பல மைல் தூரம் லொறியில் கொண்டு செல்வதால் இடையில் இறந்துள்ளனர். காரணம் பாதையின் அவலம். குழந்தை கிடைக்க லொறியில் கொண்டு சென்ற தாயிற்கு பாதையிலேயே லொறியில் குழந்தை கிடைத்து குழந்தை இறந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது 9 பிரிவினை கொண்ட தோட்டத்தில் நோயாளர் காவுவண்டி இல்லை. வேறு வைத்தியசாலையிலும் இல்லை. இது தொடர்பாக மக்கள் பல முறை போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை

எனவே வைத்தியர்கனை நியமித்து வைத்தியசாலை எப்போது முறையாக இயங்குவது அது வரைக்கும் 09 தோட்ட தொழிலாளர்களின் வைத்திய சேவையை இவர்கள் எங்கு போய் பெற்று கொள்வார்கள். தற்போது சுமார் 9 தோட்டங்களுக்கும் பொதுவாக ஒரு வைத்தியரே காணப்படுகினறார். அங்கும் முறையான மருந்து வசதிகள் இல்லை அவசர தேவை ஏற்படும் போது தோட்ட லொறிகள் மூலமாக புஸ்ஸலாவ பிரதேசத்தில் காணப்படும் வைத்திசாலைக்கு அனுப்பபடுகின்றனர். சிலர் முச்சக்கர வண்டிகளில் செல்கின்றனர். பாதையோ குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. லொறியிலும் முச்சக்கர வண்டியிலும் செல்லும் போது குழந்தைகள் பாதையிலேயே கிடைத்துள்ளது. சிலர் தகுந்த நேரத்தில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படாததினால் இறந்தும் உள்ளனர்.

இவ் நவீன காலத்தில் இப்படியும் நடக்கின்றது என்றால் அது மிகவும் ஆச்சரிய படுத்துவதாக்கும் வேதனைபடுவதற்குரியதாகும். சிலருக்கு தகுந்த நேரத்தில் வாகனங்கள் கிடைப்பதும் இல்லை. சிலர் தனியார் வாகனங்களை வாடகைக்கு பெற்று வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றனர். தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வருமானத்துடன் ஒப்பிடும் போது இவ்வகையான நிலைமை வேதனைக்குறிய விடயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here