அட்டன் நகரில் ஜீவன் கண்காணிப்பு விஜயம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அட்டன் நகர் பகுதிக்கான கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.

அத்துடன், நகரப்பகுதியில் நிலவும் குறைப்பாடுகளையும் மக்கள், நகரசபை அதிகாரிகள் ஊடாக கேட்டறிந்துகொண்டார். அவற்றுக்கான தீர்வுகளை கூடியவிரைவில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

இராஜாங்க அமைச்சராக கடமையேற்ற பின்னர் கண்காணிப்பு மற்றும் களப்பயணங்களை மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வுகளை முன்வைத்து வரும் ஜீவன் தொண்டமான் இதன் ஓர் அங்கமாக அட்டன் நகருக்கு சென்றிருந்தார். இதன்போது மக்கள் மற்றும் வர்த்தகர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

குறிப்பாக ஞாயிறு சந்தைத்தொகுதி கட்டிடத்தொகுதிக்கு சென்றிருந்த இராஜாங்க அமைச்சர், இங்கு நிலவும் குறைப்பாடுகளையும் நிவர்த்தி செய்வதறகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கினார்.

அதேபோல ஞாயிறு சந்தைத்தொகுதி மற்றும் அட்டன் பஸ் தரிப்பிடத்திலுள்ள பொதுமலசலக்கூடங்களை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு நகரசபை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

அதேவேளை, அட்டன் நகரில் குப்பை பிரச்சினையென்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது, முறையாக குப்பைகள் அகற்றப்படுவதில்லை எனவும் ஜீவன் தொண்டமானிடம் மக்கள் முறையிட்டனர், அதற்கான நடவடிக்கையும் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் உறுதி வழங்கினார்.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here