தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்துறை அணி உருவானது: காங்கிரஸ் சின்னம் வேண்டாமென வலியுறுத்தல்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நேற்று (12) நடந்த நிகழ்வில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில செயற்படும் கணிசமான இளம் சட்டத்தரணிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு, வி.மணிவண்ணனிற்கான தமது ஆதரவை தெரிவித்தனர்.

இந்த சட்டத்தரணிகள் அமைப்பின் மூலம் வடக்கு கிழக்கிலுள்ள சகல கிராம மக்களிற்குமான சட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களிற்கு சட்ட உதவி வழங்கும் பொறிமுறையொன்றை உருவாக்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள், எதிர்வரும் எந்த தேர்தலிலும் அகில இலங்க தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட வேண்டாமென வலியுறுத்தினர்.

தமிழ் காங்கிரஸை மீளுருவாக்க, தமிழ் தேசிய மக்கள் முன்னணியொன்ற பெயரை போலியாக ஒரு குடும்பம் பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பொது கட்டமைப்பை உருவாக்கி, பொது சின்னமொன்றில் இனிவரும் தேர்தல்களில் களமிறங்க வேண்டுமென்றும், அப்படியொரு முடிவை மணிவண்ணன் எடுத்தால் அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here