நேற்று 26 பேருக்கு கொரோனா!

நாட்டில் நேற்று (12) சனிக்கிழமை 26 பேர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 22 பேர், குவைத்திலிருந்து நாடு திரும்பிய 2 பேர், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து திரும்பி வந்த தலா ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,195 ஆக உயர்ந்தது.

தற்போது, 200 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, 14 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,983 ஆக உயர்ந்தது. 39 பேர் கொரொனா சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here