நடிகை மியா ஜார்ஜ் திருமணம்!

நடிகை மியா ஜார்ஜ் திருமணம் கேரளாவில், கிறிஸ்தவ முறைப்படி நேற்று நடந்தது. தொழில் அதிபரை அவர் மணந்தார்.

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடித்த ‘அமரகாவியம்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், மியா ஜார்ஜ். இவர் கேரளாவை சேர்ந்தவர். ‘அமரகாவியம்’ படத்தை தொடர்ந்து, ‘இன்று நேற்று நாளை’, ‘எமன்’, ‘ரம்’ ஆகிய படங்களில் நடித்தார்.

இவருக்கும், கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்புக்கும் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. மியா ஜார்ஜ்-அஸ்வின் பிலிப் திருமணத்தை செப்டம்பர் 12-ந் தேதி நடத்துவது என்று இருவரின் பெற்றோர்களும் முடிவு செய்தனர்.

அதன்படி, மியா ஜார்ஜ் திருமணம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புனித பசில்லா தேவாலயத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி, மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்.

அதன்பிறகு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here