வாகன இலக்கத்தகடுகளை தபால்மூலம் வழங்க நடவடிக்கை!

வாகன உரிமங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இலக்க தகடுகளை தபால் மூலம் வழங்க புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எதிர்காலத்தில் வாகன உரிமையாளர்கள் தங்களது பழைய இலக்கத்தடுகளை மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் ஒப்படைக்கத் தேவையில்லை என்று அமைச்சர் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

இரண்டு மாகாணங்களுக்கிடையில் வாகனங்கள் விற்பனையின் போது இலக்க தகடுகளில் மாற்றம் செய்யத் தேவையான சட்டமும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஒரு புதிய திட்டத்துடன் மாற்றப்படும் என்றார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோது வாகன ஒழுங்குமுறை, பஸ் போக்குவரத்து சேவைகள் மற்றும் கட்டணங்கள் மற்றும் வாகனத் துறை அமைச்சர் திலும் அமுனுகம இதைக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here