அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நவோமி ஒசாகா சம்பியன் பட்டம் வென்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டத்தை யப்பானின் நவோமி ஒசாகா வென்றார்.

கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா, பெலாரசை சேர்ந்த அஸ்ரென்காவுடன் மோதினார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 1-6, 6-3, 6-3 என அஸ்ரென்காவை வீழ்த்தி நவொமி ஒசாகா சம்பியன் பட்டம் வென்றார். நவோமி ஒசாகா வெல்லும் 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here