யாழில் ரௌடிகள் பயங்கரம்: வீடு புகுந்து குடும்பப் பெண்ணை வெட்டிச் சரித்தனர்!

தென்மராட்சி மீசாலை பகுதியில் குடும்பப் பெண் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு 8.45 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முகத்தை கருப்பு துணிகளால் மறைத்தபடி சென்ற வாள்வெட்டுக்குழு, குடும்பத் தலைவியான பெண்ணை சரமாரியாக வெட்டிச் சரித்துள்ளனர். கை, கால், உடம்பு என சகட்டு மேனிக்கு வெட்டப்பட்டதில், உயிராபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிக்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஸ்ரீதரன் பவானி (40) என்ற குடும்பப் பெண்ணே தாக்குதலிற்கு இலக்காகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here