வவுனியா தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து தப்பியோடியவர் மன்னாரில் கைது!

வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு தப்பி ஓடிய நபர் இன்று மாலை மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கட்டார் நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டிருந்த சிலாபம் மாதம்பே பகுதியைச் சேர்ந்த விஜித்த ருவான் குணவர்த்தன (36) என்ற நபர் வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து தப்பிச் சென்றார்.

இந்த நிலையில் குறித்த நபர் இன்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து சௌத்பார் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

அவரை மீண்டும் வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here