அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்ற ஆனந்தசங்கரி: வீதியில் நின்று அஞ்சலி!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என்ற பதவியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி உடனடியாக பதவி விலகி இளைஞர்களிடம் இந்த கட்சியினை ஒப்படைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

1998 ம் ஆண்டு இடம்பெற்ற குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த முன்னாள் மாநகர முதல்வர் சிவபாலனின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 91 வாக்குகளை மட்டும் பெற்ற கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி இனியும் இந்த கட்சியில் இருப்பதற்குத் தகுதியற்றவர். அவர் உடனடியாக இந்த கட்சியை விட்டு வெளியேறி அவருக்கு அடுத்ததாக உள்ள இளைஞர்களிடம் கட்சியை கொடுப்பதன் மூலமே கட்சி தொடர்ந்து அரசியலில் பயணிக்க முடியும்.

ஆனந்தசங்கரி அவர்கள் தன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து செயற்படுகிறார். எமது கட்சி உறுப்பினரின் நினைவேந்தல் நிகழ்வினை கட்சி அலுவலகத்தில் நடாத்துவதற்குக் கூட அனுமதி வழங்காது கட்சி அலுவலகத்தை பூட்டி விட்டு கொழும்புக்குச் சென்றுவிட்டார். உடனடியாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுவினை கூட்டி கட்சியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து ஆனந்தசங்கரி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர் விடுதலை கூட்டணியை ச.அரவிந்தன் கைப்பற்ற முயற்சிக்கும் பின்னணியில் அந்த கோரிக்கை எழுந்துள்ளது.

அரவிந்தன் அணியை சேர்ந்த தங்கமுகுந்தன் தரப்பினர் நேற்று முன்னாள் மேயர் சிவபாலனின் நினைவுநாளை அலுவலகத்தில் அனுட்டிக்க திட்டமிட்டனர். எனினும், கட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு ஆனந்தசங்கரி கொழும்பு சென்று விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here