உயர்பதவிகளிற்கான குழுவின் அங்கத்தவராக த.சித்தார்த்தன்!

9வது நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளிற்கான குழுவின் அங்கத்தவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இந்த நியமனம் வழங்கப்பட்டது.

இந்த குழுவில் 12 அங்கத்தவர்கள் உள்ளனர். தமிழ் பேசுபவர்கள் சார்பில் த.சித்தார்த்தன் மட்டுமே குழுவில் இடம்பிடித்துள்ளார்.

வெளிநாட்டு தூதர்கள், அமைச்சு செயலாளர்கள் உள்ளிட்ட அரசின் உயர்பதவிகளில் நியமிக்கப்படுபவர்களை மேற்படி குழுவே அங்கீகரிப்பது சம்பிரதாயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here