யாழ் முதியவரின் விருப்பப்படி மருத்துவபீடத்தில் ஒப்படைக்கப்பட்ட உடல்!

மரணத்தின் பின்னர் தனது உடலை யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடத்திற்கு வழங்க வேண்டுமென விரும்பிய முதியவரின் உடலை, பிள்ளகள் மருத்துவ பீடத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

பலாலியை சேர்ந்த முத்தையா சிவானந்தவேல் (73) என்ற முதியவரின் சடலமே மருத்துவபீடத்தில் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த முதியவர், தான் இறந்த பின்னர் சடலத்தை யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைக்காக வழங்க வேண்டுமென மனைவி, பிள்ளைகளிடம் விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவர் காலமானார். அவரது உடல் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில், பலாலி பொலிசார் ஊடாக உயிரிழந்தவரின் மனைவி, பிள்ளைகள் மல்லாகம் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தனர்.

விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, மனைவி மற்றும் பிள்ளைகளின் சம்மதத்துடன் உடலை பல்கலைகழக மருத்துவபீடத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

கிரியைகள் செய்த பின்னர் உடலை ஒப்படைக்க பிள்ளைகள் விரும்பியபோதும், கிரியைகள் செய்ய நேரம் போதாமையால், உடல் மருத்துவபீடத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here