மீண்டும் சிறைச்சாலையாகியது போகம்பரை!

சிறைகளில் ஏற்பட்டள்ள நெரிசல் சிக்கலையடுத்து, கண்டி போகம்பரையை மீண்டும் சிறைச்சாலையாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இதனை தெரிவித்தார். அவர் விரைவில் போகம்பறை சிறைச்சாலைக்கு வருகை தருவேனென நம்புவதாகவும் கூறினார்.

பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளுடனான சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கண்டியில் சுற்றுலாவை அதிகரிக்கும் பொருட்டு போகம்பரை சிறைச்சாலையை அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார பூங்காவாக மாற்ற முன்னைய அரசு முடிவு செய்திருந்தது.

போகம்பரை சிறை 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் சிறை வளாகத்தை மூட அரசாங்கம் முடிவு செய்தது. அங்கிருந்த கைதிகள் பல்லேகளவில் அமைக்கப்பட்ட புதிய சிறை வளாகத்திற்கு மாற்றப்பட்டனர்.

தற்போது, சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியுள்ளது என்று சிறைச்சாலை ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனிய தனக்கு தெரிவித்துள்ளதாக கமால் குணரத்ன கூறினார்.

போதைப்பொருள் பாவனையின் அனைத்து மட்டங்களையும் தடுக்கும் வகையில் சட்ட அமலாக்க அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

தம்புள்ள பகுதியில் உள்ள கிராமத்திற்கு அவர் சமீபத்தில் சென்றதாகவும், அன்றிரவு அவர் தங்கியிருந்த  இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள கிராமவாசிகள் 10 க்கும் மேற்பட்ட கடிதங்களை ஒப்படைத்தாகவும், போதைப்பொருளை ஒழிக்கும்படி அவர்கள் கேட்டதாகவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here